கடந்த 09.10.2026 அன்று, BSNL கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், 41 வது தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. BSNLEU வின் பழைய உறுப்பினர்களோடு, புதிய உறுப்பினர்களாக தோழர் M.விஜயகுமார் தலைவர், தோழர் கணேஷ் ஹிங்கே DY.GS, மற்றும் தோழர் திபேஷ் ராணா JE ஆகியோர் பங்கேற்றனர். துவக்கத்தில், ஊழியர் தரப்பு செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, ஊழியர்களை பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகளை முன்னிலைப் படுத்தி பேசினார். ஊதிய ஒப்பந்தம், புதிய பதவி உயர்வு கொள்கை, PERKS AND ALLOWANCES மாற்றம், விதி 8 மற்றும் 9 இன் கீழ் மாற்றல்கள், மனிதவள சீரமைப்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளின் மீது, DIRECTOR (HR) மற்றும் PGM (SR) பதில் அளித்தனர்.
விளையாட்டு நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு, மாற்றலில் இருந்து விலக்கு, அனைத்து மாநிலங்களிலும் இலாக்கா தேர்வு நடத்துவது மற்றும் கேஷுவல் ஊழியர்களுக்கு DA வழங்குவது உள்ளிட்ட இதர பிரச்சனைகளை, BSNLEU தலைவர்கள் வலுவாக எழுப்பினர். நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கு ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான காலதாமதத்தின் மீது, தங்களது கடுமையான அதிருப்தியை பதிவு செய்த ஊழியர் தரப்பு, இவற்றிற்கு விரைவில் நிர்வாகம் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியது.
விவாதத்தின் போது, 3rd PRC பிரச்சனை, DoTயில் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாக, நிர்வாகம் தெரிவித்தது. முன்மொழியப்பட்டுள்ள புதிய பதவி உயர்வு கொள்கை மீதான ஆலோசனைகளை, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களிடமிருந்து, விரைவில் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள், மேலும் காலதாமதம் இன்றி, தீர்வு காணப்பட வேண்டும் என, BSNLEU வலியுறுத்தியது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
ஆய்படு பொருட்கள் மீதான, அறிக்கை காண இங்கே சொடுக்கவும்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
