BSNL ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, ஊதியம் மாற்றம் / ஓய்வூதியம் மாற்றம் பெற்றே தீருவது என முடிவு எடுத்து, தொடர்ச்சியான போராட்ட இயக்கங்களை, நாடு முழுவதும், AUAB பதாகையின் கீழ், நாம் நடத்தி வருவதை, அனைவரும் அறிவோம். AUAB போராட்ட இயக்கத்தின் ஒரு அங்கமாக, நாடு முழுவதும் உள்ள, ஆளுநர்கள் மாநில முதல்வர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, மகஜர் வழங்க, அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்காக, சேலம் மற்றும் நாமக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களிடம், நேரம் கேட்டிருந்தோம்.
சேலம் பாராளுமன்ற தொகுதி, மக்களவை உறுப்பினர், உயர்திரு T. M. செல்வகணபதி அவர்கள், நமக்கு, 22.10.2026, மாலை 4.30 மணிக்கு நேரம் ஒதுக்கினார். அதன் அடிப்படையில், சேலம் மாவட்ட AUAB சார்பாக, 22.10.2026 அன்று, சேலம் பாராளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினர், உயர்திரு T. M. செல்வகணபதி அவர்களை, அவரது அலுவலகத்தில், நேரில் சந்தித்து, AUAB சார்பாக மகஜர் வழங்கினோம்.
நமது 6 பக்க மகஜரை முழுவதுமாக படித்து, நம்மிடத்தில் அது சம்பந்தமான கருத்துக்களை கேட்டு பெற்று, நிச்சயமாக மத்திய தொலைதொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறேன், பாராளுமன்றத்திலும், எதிர் வரும் குளிர் கால கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புகிறேன் என, மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர், நம்மிடம் உறுதி அளித்தார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
AUAB மகஜர் காண இங்கே சொடுக்கவும்











