Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, September 11, 2026

BSNLEU மாநில மையக் கூட்டம்!


BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில மையக் கூட்டம், 09.09.2026 அன்று இரவு நடைபெற்றது. மாநில மைய கூட்டத்தில், தோழர் S.செல்லப்பா AGS., தோழர் B. மாரிமுத்து CS, தோழர் V. மகேஸ்வரன் CP, தோழர் V. செந்தில்குமார் CT, தோழர் A. பாபு ராதா கிருஷ்ணன் CVP மற்றும் தோழர் K. சீனிவாசன் ACS ஆகிய மைய தோழர்களுடன், தோழர் S. ஹரிஹரன் ACS அவர்களும் பங்கேற்றார். 

விவாதங்களுக்கு பின், கீழ்க்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டன.

1) BSNL சேவைகள் சீரமைக்கப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, 16.09.2026 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த, மாலை நேர தர்ணா இயக்கம், 24.09.2026 அன்று நடைபெறும்.  அதற்கான முறையான அறிவிப்பு, 10.09.2026 அன்று மாநில நிர்வாகத்திற்கு வழங்கப்படும்.

2) BSNLCCWF அகில இந்திய மாநாடு, 03.10.2026 அன்று, டெல்லியில் நடைபெற உள்ளது.  இதில் பங்கேற்க உள்ள ஒப்பந்த ஊழியர்கள், சில நாட்கள் ஊதியத்தையும் இழக்க வேண்டி இருக்கும். அது மட்டுமல்லாமல் அகில இந்திய மாநாட்டு செலவுகளுக்கு, நாமும் நமது பங்களிப்பை தர வேண்டியுள்ளது. எனவே, BSNLEU மாவட்டச் சங்கங்கள், ஒப்பந்த ஊழியர் சங்கங்களுடன் இணைந்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

3) AUABயின் போராட்ட இயக்கங்களை, தமிழகத்தில் வெற்றிகரமாக அமலாக்கிட, விரைவில் மாநில AUAB கூட்டம் நடத்தப்பட வேண்டும்.  அந்தக் கூட்டம் முடிந்தவுடன்,  மாவட்டங்களில் AUAB கூட்டங்களை நடத்தி, மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கான போராட்டங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தோழமையுடன், 
B.மாரிமுத்து, 
மாநிலச் செயலர்