துர்கா பூஜா, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் நெருங்கிவரக்கூடிய இந்த சூழ்நிலையில், BSNL ஊழியர்களுக்கு மீண்டும் பண்டிகை கால முன்பணம், FESTIVAL ADVANCE வழங்கப்பட வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 31.08.2026 அன்று BSNLEU தலைவர்கள், CMD BSNLஐ சந்தித்து, நிறுவனத்தின் அனைவராலும் வரவேற்கத்தக்க, சேமநல திட்டமான, பண்டிகை கால முன்பணம் வழங்குவதை நிறுத்தியதன் காரணமாக, ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கூறியது. பண்டிகை கால முன்பணம் தொடர்பாக சில விளக்கங்களை கேட்டுப் பெற்ற CMD BSNL, இந்த பிரச்சனையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய முன்பணத்தை, குறுகிய காலத்தில் மாதாந்திர தவணையில் நிர்வாகம் திரும்ப பெற்றுக் கொள்வதால், நிர்வாகத்திற்கு நிரந்தரமான சுமை ஏதும் கிடையாது என்பதை தலைவர்கள் சுட்டிக்காட்டினர். தற்போதுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 20,000 ரூபாயை பண்டிகைக்கால முன்பணமாக வழங்க வேண்டும் என, நமது சங்கம் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த முக்கியமான ஊழியர்களின் சேமநல திட்டத்தை மீண்டும் அமலாக்கும் வகையில், சங்கத்தின் கோரிக்கையை, சாதகமாக நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என, BSNLEU வலியுறுத்தியுள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
