தோழர் அனிமேஷ் மித்ரா GS BSNLEU மற்றும் தோழர் கணேஷ் ஹிங்கே Dy.GS ஆகியோர், 31.08.2026 அன்று, திரு A.ராபர்ட் J.ரவி CMD BSNL அவர்களை சந்தித்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊழியர் பிரச்சினைகளை தீர்ப்பதில், கார்ப்பரேட் அலுவலக நிர்வாகம் மாறுபட்ட நிலை எடுப்பதற்கு, தங்களது கடுமையான அதிருப்தியை தெரிவித்தனர். CMD BSNLஇன் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லும் வகையில், 01.07.2026 அன்று, CMD BSNL இடம் சமர்ப்பிக்கப்பட்ட, ஆய்படு பொருட்களை சுட்டிக்காட்டினர்.
விவாதத்தின் போது நமது தலைவர்கள், மூன்றாவது ஊதிய மாற்றம், இலாகா தேர்வுகள், விதி 9 இன் கீழ் மாற்றல்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கு அலவன்ஸ்கள், பண்டிகை கால முன்பணம், ஓய்வு கால பலன்களுக்கான பங்களிப்பு (SAB) மற்றும் கேஷுவல் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய CDA ஆகிய பிரச்சனைகளை முன்னிலைப் படுத்தினர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், நிர்வாகத்தின் வரம்பிற்கு உட்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண, ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளும் வகையில், மற்றொரு கூட்டம் நடத்தப்படும் என CMD BSNL உறுதி அளித்தார். ஊழியர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, சாதகமான அணுகுமுறையுடன் செயல்படும் CMD BSNLக்கு, தலைவர்கள் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்
