Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, August 12, 2026

NE ஊழியர்களுக்கான, பணபலன் தரும் கோரிக்கைகளை, நிர்வாகம் மேலும் தாமதமின்றி பரிசீலிக்க வேண்டும்.


NE ஊழியர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பல நிதிசார் சலுகைகள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. புதிய பதவி உயர்வு கொள்கை, சலுகைகள் மற்றும் படிகளின் (PERKS AND ALLOWANCES) திருத்தம், அதிகாரிகளுக்கு வழங்குவது போல் அலைபேசி கருவி வாங்குவதற்கான நிதி மற்றும் 01.10.2000க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான 30% SAB ஓய்வூதிய பலன்கள் போன்றவை இன்னும், BSNL BOARD / நிர்வாக ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 

7-வது ஊதியக் குழுவின்  பரிந்துரைகளின்படி சில அதிகாரிகள் மேம்படுத்தப்பட்ட சலுகைகளைப் பெற்று வரும் நிலையில், NE ஊழியர்கள், போக்குவரத்துப் படி, திறன் மேம்பாட்டுப் படி மற்றும் பிற சலுகைகளை இன்னும் பழைய விகிதங்களிலேயே பெற்று வருகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு நியாயமற்றது; இது சரிசெய்யப்பட வேண்டும். 

BSNLEU நிர்வாகத்திடம் பல முறை பேசியும், தேசிய கவுன்சிலில் விவாதித்தும், பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை. BSNLலின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாக நிர்வாகம் சொல்லி வரும் இந்த சூழலில், NE ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக ஏற்று கொள்ளப்பட வேண்டும் என, BSNLEU மீண்டும் நிர்வாகத்தை வலியுறுத்கிறது.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய சங்க இணைய தளம்