போராட்ட களம்
இடி முழங்கியது. மழை கொட்டியது. இருந்தாலும், BSNLEU, AIBDPA மற்றும் BSNL CCWF சங்கங்கள் ஒன்றிணைந்த, BSNL ஒருங்கிணைப்பு குழு என்ற பதாகையின் கீழ் தரையில் கால் பதித்து, தொழிலாளர்கள் தர்ணாவில் உறுதியாக நின்றனர். அரசாங்கத்தால் ஒன்பது ஆண்டுகளாக செய்ய முடியாததை - அவர்களின் உறுதியை உடைப்பதை - வானமும் செய்ய முடியாது என்பதை அவர்கள் தெளிவு படுத்தினர்.
தோழமையுடன்:
CITUவின் அகில இந்திய தலைவர், தோழர் சுதீப் தத்தா, போராடும் ஊழியர்களின் தோளோடு தோள் கொடுத்து ஆதரித்தது, இது BSNL-ன் போராட்டம் மட்டுமல்ல - இந்திய உழைக்கும் வர்கத்தின் போராட்டம் என்பதை எடுத்துக் காட்டியது!
நிலுவையில் உள்ள பிரச்சனைகள்
1. ஊதிய மாற்றம்
AFFORDABILITY பிரிவை சுட்டிக்காட்டி, BSNL ஊழியர்களுக்கு 2017 முதல் நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதிய மாற்றம் என்பது, சுமார் பத்தாண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கணக்கில் 4G ஸ்பெக்ட்ரம் மறுக்கப்பட்டது, உபகரணங்கள் கொள்முதல் மீதான கட்டுப்பாடுகள், மிகவும் தாமதமாகவும் மிகவும் குறைவாகவும் வந்த மூலதன ஆதரவு போன்ற அரசாங்கத்தின் சொந்த முடிவுகளால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு, ஊழியர்கள் தண்டிக்கப் படுகின்றனர்.
2. ஓய்வூதிய மாற்றம்
ஓய்வூதிய மாற்றம் தொடர்பான பிரச்சனையில் நீதிமன்றங்கள், தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்பளித்தும் கூட, 2017 முதல் நிலுவையில் உள்ள ஓய்வூதிய மாற்றம் தீர்வு காணப்படாமல் உள்ளது.
3. TSM / CASUAL / ஒப்பந்த தொழிலாளர்கள்
20 முதல் 25 ஆண்டுகள் சேவை செய்த TSMகள் மற்றும் கேசுவல் தொழிலாளர்கள் - இன்னமும் 6-வது ஊதியக்குழு விகிதத்திலேயே ஊதியம் பெறுகிறார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம், EPF மற்றும் ESI மற்றும் கண்ணியம் மறுக்கப்படுகிறது.
4. RESTRUCTURING என்ற பெயரில் தனியார்மயமாக்கல்
இப்போது "RESTRUCTURING". VRS-2019க்கு பிறகு BSNL-ன் ஊழியர் எண்ணிக்கை பாதியாக குறைத்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட PILOT PROJECT, BSNLஐ காப்பாற்ற கொண்டு வரப்பட்ட திட்டமல்ல. சேவைகளை மேலும் மோசமாக்கி, இறுதியில், BSNL-ஐ தனியார்மயமாக்கலுக்கு வழி வகுக்கவே கொண்டு வரப்பட்ட திட்டம்.
BSNL, சந்தையில் தோற்கவில்லை என்பதில் தெளிவு கொள்வோம்.
தோற்கடிக்கப் பட்டது யாரால்? அரசாங்கத்தின் கொள்கைகளால், அதன் வடிவமைப்பால், சரிவை சரிப்படுத்த, புத்தாக்க திட்டம் என்ற பெயரில், லட்சக்கணக்கான கோடிகளை தேவையற்ற பகுதிகளில் செலவழித்ததால் தான் தோற்கடிக்கப்பட்டது. "AFFORDABILITY" நிபந்தனை இயற்கையான சட்டமல்ல. அது ஒரு தேர்வு. தொழிலாளர்களின் நிர்பந்தத்தால், தேர்வுகளை மாற்ற முடியும். இந்த போராட்டத்திற்கு தேவையான உறுதியை, கொட்டும் மழையிலும், BSNL தொழிலாளர்களாகிய நாம் வெளிப்படுத்தி உள்ளோம். இயற்கையானதோ அல்லது அரசியல் ரீதியானதோ, எந்த புயலும், நீதிக்கான நமது கோரிக்கையை அழிக்க முடியாது.
BSNLஐ பாதுகாப்போம்.
ஊதிய மாற்றத்தை தீர்வு காண்போம்.
ஓய்வூதிய மாற்றத்தை தீர்வு காண்போம்.
ஒப்பந்த ஊழியர்களின் பணி நீக்கத்தை தடுத்து நிறுத்துவோம்.
தனியார் மயமாக்கலுக்கு வழி வகுக்கும் சீரமைப்பு திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்.
BSNL ஒருங்கிணைப்பு குழுவை பலப்படுத்துவோம்!
தொழிலாளர் ஒற்றுமை வாழ்க!
தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU




















