Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, July 12, 2026

உத்தரகாண்ட் மாநில முன்னோடி திட்டம் - BSNLCMDக்கு, AUAB கடிதம்

 


ஏற்கனவே AUAB கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலத்தில், முன்னோடி திட்டம் மூலமாக, மாநில சீரமைப்பை அமலாக்க வேண்டும் என்கின்ற, BSNL நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவை கடுமையாக எதிர்த்து, 2026, ஜூலை 10ஆம் தேதி AUAB , CMD BSNLக்கு ஒரு மகஜரை வழங்கி உள்ளது.  சீரமைப்பு திட்டத்தின் மீது தங்களின் கடுமையான அதிருப்தியை அந்த மகஜரில் தெரிவித்த AUAB, அந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெளிவாக கோரிக்கை வைத்துள்ளது.  ஊழியர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்காமல்,  அந்த திட்டத்தை நிர்வாகம் அமலாக்கும் என்று சொன்னால், ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களிடம் இருந்து, ஒரு கடுமையான எதிர்ப்பு வெடித்து கிளம்பும் என, AUAB, நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர். 

மேலும் இந்த முன்மொழிவை உடனடியாக நிர்வாகம் திரும்ப பெறவில்லை என்று சொன்னால், 2026 ஜூலை 15ஆம் தேதி அனைத்து, BA மற்றும் தலைமை பொது மேலாளர் அலுவலக மட்டங்களில், நாடு தழுவிய அளவில், இந்த தன்னிச்சையான முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை, AUAB நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது. 

தோழர் அனிமேஷ் மித்ரா, GS., BSNLEU  

AUAB கடிதம் காண இங்கே சொடுக்கவும்