Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, July 27, 2026

கருப்பு பேட்ஜ் போராட்டம்!


உத்தர்காண்ட் மாநிலத்தில், "உத்தர்காண்ட் முன்னோடி திட்டம்" என்கிற பெயரில், BA / OA க்களை இணைப்பது, ( பழைய SSA), ஊழியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவது, ஊரக பகுதிகளுக்கு மட்டும் நமது ஊழியர்களை அனுப்புவது, நகர பகுதிகளுக்கு OUTSOURCING முறையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது, என ஊழியர்களை உபரியாக்கும் நடவடிக்கையை கார்ப்பரேட் நிர்வாகம் எடுத்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களோடு எந்தவிதமான விவாதமும் இல்லாமல், "உத்தர்காண்ட் முன்னோடி திட்டம்" என்ற பெயரில், தன்னிச்சையாக கார்ப்பரேட் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த மாநில ஊழியர்கள், அதிகாரிகள், ஒன்றுபட்டு, AUAB பதாகையின் கீழ், இந்த திட்டத்தை எதிர்த்து, கடந்த 04.07.2026 முதல்  பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மற்ற மாநிலங்களுக்கும், இந்த "பிற்போக்கான" முன்னோடி திட்டத்தை, விஸ்தரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

புதுடில்லியில், இன்று (27.07.2026), நடைபெற்ற AUAB CHQ கூட்டத்தில், நாளை (28.07.2026) நாடு முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது, 31.07.2026 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்துவது, 03.08.2026 அன்று திட்டத்தை எதிர்த்து, ட்விட்டர் இயக்கம் நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கிளை செயலர்கள், (28.07.2026) நாளை பணிக்கு வரும் நமது ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு, கருப்பு பேட்ஜ்களை வழங்கி, அவர்கள் அதை அணிந்து பணிபுரியுமாறு கேட்டு கொள்ளவேண்டும். இயக்க படங்களை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்