Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, July 27, 2026

ட்விட்டர் இயக்கம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது!

 


CoC சார்பாக, மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதியம் மாற்றம், ஒப்பந்த ஊழியர் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.07.2026) நாடு முழுவதும், ட்விட்டர் இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. நமது மாவட்டத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள், இன்று, புதியதாக ட்விட்டர் கணக்குகளை துவங்கி, நமது கோரிக்கைகளை, அதில் பதிவிட்டுள்ளார்கள்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், கணக்கை துவங்கி, நமது கோரிக்கைகளை, செய்திகளாக பதிவிட்ட தோழர்களுக்கு, சேலம் மாவட்ட CoC சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய சங்கம் முழுமையான தகவல் வெளியிட்டவுடன் அவை முறையாக பகிரப்படும். இருப்பினும், சமூக வலை தளங்களில் ஒன்றான, ட்விட்டரில் புதியதாக இணைந்துள்ள, நமது தோழர்களுக்கு, வாழ்த்துக்களையும், புதிய முயற்சிக்கு, பாராட்டுகளையும், சேலம் மாவட்ட CoC சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
கன்வீனர், CoC