இன்றைய உலகம், சமூக வலைதள உலகமாக மாறிவிட்டது. இந்திய பிரதமர் தான் சொல்ல விரும்பும் செய்திகளை கூட, X (Twitter) என்ற சமூக வலைதளம் மூலம் தான் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிறார். அப்படி என்றால், நாமும் அவருக்கு, ட்விட்டரில் தான் நமது கோரிக்கைகளை செய்தியாக அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளோம். இதை நமது BSNLEU மத்திய சங்கம் தான் முதன் முதலில் உணர்ந்து, கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே, முறையாக கையாண்டு, மிகப் பெரிய பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தியது, என்று சொன்னால், அது மிகையல்ல.
ஆம், 2019-2020ல் மாதா மாதம், விதவிதமான நாட்களில், முறையற்ற வகையில், நமது ஊதியம் பட்டுவாடா செய்யப்படும். அதை முறைப்படுத்த, நமது மத்திய சங்கம் அன்றே, இந்த ட்விட்டர் சமூக வலைதளத்தை முறையாக பயன்படுத்தியதால், நாம் முறையான தேதிகளில் ஊதியம் பெற துவங்கினோம்.
மூன்றாவது ஊதிய மாற்றம் பெற, இன்று, மீண்டும், ஒரு வாய்ப்பு. தற்பொழுது ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக இயக்கம். ஒருங்கிணைப்புக் குழு, CoC முடிவின் அடிப்படையில், நாளை (27.07.2026) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, நாம் அதிகமாக tweet செய்ய வேண்டிய subject, கருப்பொருள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே copy, paste செய்தால் போதும். 13 கோரிக்கைகள், இணைக்கப்பட்டுள்ளது. அவை தனித்தனியாகவும், வழங்கப்பட்டுள்ளது. இதை அப்படியே copy, paste செய்தால் போதும்.
இந்திய பிரதமருக்கு நாம் செய்தி அனுப்ப வேண்டும் என்று சொன்னால், # பட்டனை டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு, @PMOIndia என டைப் செய்து, 13 செய்திகளையும், தனி தனியாக copy, paste செய்தால், அவருக்கு நம்முடைய செய்தி சென்று சேர்ந்து விடும். இவ்வளவுதான் விஷயம். அதே போல், ஒன்றிய தொலைதொடர்பு அமைச்சர், ஒன்றிய தொலை தொடர்பு இணை அமைச்சர், தொலைத்தொடர்புத் துறை, CMD BSNL என்கிற முகவரியையும் இணைத்து விட்டால் அவை தனித்தனியாக அவர்களுக்கு சென்று சேர்ந்து விடும்.
இதை தான் tag செய்வது என்று சொல்வார்கள். முடிந்தால், மாவட்ட செயலர் @Atturhari என tag செய்தால், மாவட்ட செயலருக்கும், நீங்கள் அனுப்பிய செய்தி வந்துவிடும். கடினமான வேலை ஒன்றும் இல்லை. ஒரு முறை பழகினால், சுலபமே. இதைவிட சுலபமான ஒரு விஷயமும் இருக்கிறது. அது என்னவென்றால்? நம் தலைவர்கள், நாளை (27.07.2026) காலை 10 முதல் பகிரும் செய்திகளை, அவர்களுடைய முகவரிக்கு சென்று பார்த்து, அதை repost செய்வது மிகவும் சுலபமான விஷயம். repost என்கிற பட்டனை அழுத்தினால் போதும். தானாக, நீங்கள் அனுப்பியது போல் அது மாறிவிடும்.
இந்த விஷயங்களை தொடர்ந்து, அதிகப்படியாக, செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால், நம் செய்தி, தலைப்புச் செய்தியாக, trending மாறிவிடும். நாளை (27.07.2026) நமது செய்தி trend ஆகிவிட்டால், ஒன்றிய அரசாங்கத்திற்கு கடுமையான நிர்ப்பந்தம் ஏற்படும், என்பதையும் சூசகமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இது சம்பந்தமான சந்தேகங்கள், விளக்கங்கள், ஏதேனும் தேவைப்பட்டால், மாவட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
செய்திகள் அனுப்பவேண்டிய முகவரிகள்:
# @PMOIndia
# @JM_Scindia
# @DoT_India
# @PemmasaniOnX
# @CMDBSNL
Subject for the Twitter campaign programme. (13 செய்திகள்)
(1) # Implement Wage Revision.
(2) # Implement Minimum Wage.
(3) # BSNL's top Management got Pay Revision as per 7th CPC Recommendations. Why deny Wage Revision to the employees.
(4) #Implement Pension Revision.
(5) # Thousands of BSNL employees are suffering huge pay loss due to non-settlement of Wage Revision. Implement Wage Revision Agreement immediately.
(6) # Implement minimum wages to the contract workers and 7th CPC pay scale to casual labourers.
(7) # Don't retrench contract workers. Ensure implementation of labour laws.
(8) # Ensure job security and labour laws for casual contract labourers.
(9) # Implement minimum wage and EPF, ESI,Social Securities for the casual contract labourers.
(10) # Relax Affordability Clause to enable the 3rd PRC and Wage Agreement implementation.
(11) # Denial of the Wage Revision is a big injustice to BSNL employees.
(12) # Wage Revision and Pension Revision in BSNL- need of the hour.
(13) # Stop exploitation and retrenchment of contract workers - 7th CPC pay scale for casual labourers.
