சேலம் மாவட்ட CoC முடிவின் அடிப்படையில், மூன்றாம் நாள் தர்ணா போராட்டம், 24.07.2026 அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், மாலை நேர தர்ணா போராட்டமாக, எழுச்சியுடன் நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர்கள் R. ஸ்ரீநிவாசன் (BSNLEU), P. தங்கராஜூ, (AIBDPA), P. செல்வம், (TNTCWU), கூட்டு தலைமை பொறுப்பேற்றனர். போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து, தோழர் C. பாஸ்கர், மாநில பொருளர், TNTCWU துவக்கவுரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, தோழர்கள் S. அழகிரிசாமி, மாநில அமைப்பு செயலர், AIBDPA, M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், BSNLEU, M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU, B. சுதாகரன், மாவட்ட உதவி செயலர், AIBDPA, R. ரமேஷ், மாவட்ட பொருளர், BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பின்னர், தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA, கோரிக்கை விளக்கவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து, தோழர் S. ஹரிஹரன் மாவட்ட செயலர், BSNLEU நிறைவுறையாற்றினார்.
தோழியர் C. லாவண்யா மாவட்ட உதவி செயலர், BSNLEU நன்றி கூறி தர்ணாவை முடித்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக இயக்கத்தில் கலந்து கொண்டனர்.




















