Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, July 25, 2026

மூன்று நாள் தர்ணா போராட்டம், பிரம்மாண்ட வெற்றி! நன்றி !!


BSNLலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதியம் மாற்றம்,  ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யக்கூடாது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் நடைபெற்ற மூன்று நாள் தர்ணா போராட்டம், நமது சேலம் மாவட்டத்தில், பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. நேற்று (24.07.2026) மூன்றாம் நாள், மாலை நேர தர்ணா போராட்டம் நிறைவு பெற்றவுடன்,  இருக்கக்கூடிய, BSNLEU, AIBDPA, TNTCWU, மூன்று சங்க, மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்களை  வைத்து, மதிப்பாய்வு கூட்டம், நடத்தப்பட்டது. தோழர்களின் கருத்துக்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதில், மூன்று நாள் தர்ணா போராட்டம் சேலம் மாவட்டத்தில், பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

400க்கும் மேற்பட்ட தோழர்கள், ஐந்து மையங்களில் நடைபெற்ற, மூன்று நாள் இயக்கத்தில் பங்கெடுத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயம். பெண் தோழர்களின் பங்கேற்பு அனைத்து பகுதிகளிலும், கனிசமாக இருந்துள்ளது. SNEA, FCCPA போன்ற தோழமையும் அமைப்புகள் இயக்கத்தை வாழ்த்தியது கோரிக்கை பரவலாக்கப்பட்டுள்ளதை, உணர்த்துகிறது. பருவ காலத்திற்கு, சம்பந்தமில்லாத, அசாதாரண வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், தோழர்கள் இயக்கத்தில் கலந்து கொண்டது, பாராட்டுக்குரிய அம்சம்.

மூன்று நாள் இயக்கத்திலும், மூன்று சங்க கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், உரிய முக்கியத்துவத்தோடு தோழர்களை திரட்டி அவர்களை பங்கு பெற செய்தது,  பாராட்டுக்குரியது. மூன்று நாள் இயக்கத்திலும் கலந்து கொண்ட தோழர்களுக்கு, சேலம் மாவட்ட CoC சார்பாக நெஞ்சு நிறை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ள, மன குமறலை இந்த இயக்கம்  உணர்த்தியுள்ளது. இதனை, ஒன்றிய அரசு முழுமையாக உள்வாங்கும் என நம்புவோம். மூன்று நாள் இயக்க செய்திகளையும் முழுமையாக திரட்டி, ஒன்றிய அரசுக்கு உரிய முறையில் அனுப்பி வைத்த, குற்றப் புலனாய்வுத் துறைக்கும், செய்தி மற்றும் காட்சி ஊடக துறைகளுக்கும், நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
S. தமிழ்மணி, 
தலைவர்,
S. ஹரிஹரன், 
கன்வீனர்,
M. செல்வம், 
இணை கன்வீனர்
CoC சேலம்