Affordability பிரிவை தளர்த்தி, BSNL ஊழியர்களுக்கு, மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில, CoC அறை கூவல் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில், மூன்று நாள் தர்ணா போராட்டம், பிரம்மாண்டமாய், இன்று (22.07.2026) துவங்கியது. சேலம் GM அலுவலகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, தோழர்கள் R. ஸ்ரீநிவாசன் (BSNLEU), B. சுதாகரன் (AIBDPA), P. செல்வம் (TNTCWU) கூட்டு தலைமை பொறுப்பேற்றனர்.
போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து, தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், BSNLEU துவக்கவுரை வழங்கினார். அதிகாரிகள் சங்கம் சார்பாக, SNEA சேலம் மாவட்ட செயலர் தோழர் K. சீனிவாசன், தர்ணாவில் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். FCCPA கூட்டமைப்பு சார்பாக தோழர் K. R. கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.
TNTCWU சேலம் மாவட்ட செயலர், தோழர் M. செல்வம், AIBDPA மாநில அமைப்பு செயலர் தோழர் S. அழகிரிசாமி, BSNLEU மாவட்ட பொருளர் தோழர் R. ரமேஷ், AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி ஆகியோர் கருத்துரை வழங்க, தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், BSNLEU நிறைவுரை வழங்கினார்.
100க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்ட இயக்கத்தை, தோழர் P. தங்கராஜூ, மாவட்ட பொருளர் நன்றி கூறி முடித்து வைத்தார்.





















