AIBDPA தமிழ் மாநில உதவி செயலரும், BSNLEU சேலம் மாவட்ட முன்னாள் செயலருமான, தோழர் E. கோபால், அவர்களின் தாயார் திருமதி சித்தாயம்மாள் (வயது 94) இன்று (21.07.2026) மதியம் 3 மணி அளவில், வயது மூப்பு காரணமாக, இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மையாரின் இறுதி சடங்குகள், ஊர்வலம், நாளை (22.07.2026) நண்பகல் 12 மணி அளவில், தர்மபுரி மாவட்டம் இந்தூர் அருகில் உள்ள, இராஜாகொல்லஅள்ளி கிராமத்தில், (தர்மபுரி to பென்னாகரம் சாலையில், சோம்பட்டி பிரிவில் இருந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவு) தோழரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தாயாரை பிரிந்து வாடும் தோழர் E. கோபால், மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, BSNLEU சேலம் மாவட்ட சங்கம், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
