BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக, AFFORDABILITY, "கூடுதல் செலவீனங்கள் தாங்கும் திறன்" பிரிவை தளர்த்தி, மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ரத்து, ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்ட போராட்டமான, கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டத்தை, நமது மாவட்டத்தில், வெற்றிகரமாக நிறைவேற்றியதை, நாம் அறிவோம்.
இரண்டாம் கட்ட இயக்கங்களான, 22.07.2026 முதல் 24.07.2026 வரை, மூன்று நாள் தர்ணா போராட்டத்தை, நமது மாவட்டத்தில் சிறப்பாக நிறைவேற்ற, ஏற்கனவே சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு, CoC., கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில். கீழ்கண்ட அட்டவணை படி இயக்கங்கள் நடைபெறும்.
22.07.2026 - புதன்கிழமை - மாவட்டம் தழுவிய முதல் நாள் தர்ணா
சேலம் சீரங்கபாளையம், GM அலுவலகம்
காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை
23.07.2026 - வியாழக்கிழமை - இரண்டாம் நாள் தர்ணா
நாமக்கல், திருச்செங்கோடு, ஆத்தூர் என மூன்று மையங்களில் இயக்கம் நடைபெறும். காலை 10 மணி முதல் இயக்கம் நடைபெறும்.
24.07.2026 - வெள்ளிக்கிழமை - மாவட்டம் தழுவிய, மூன்றாம் நாள் தர்ணா
சேலம் மெயின் தொலைபேசி நிலையம். மதியம் 3 மணி முதல், மாலை 6 மணி வரை - மாலை நேர தர்ணா போராட்டம்.
தோழர்களே! இது நமது அடிப்படை வாழ்வாதார கோரிக்கை. ஒன்று பட்ட சக்திமிக்க இயக்கங்கள் மூலம் தான், அரசாங்கத்தின் கொள்கை முடிவை மாற்ற முடியும் என்கிற புரிதலோடு, திரளாக நாம் இயக்கங்களில் கலந்து கொள்வோம். இயக்கங்ககளை வெற்றி பெற செய்வோம்.
தோழமையுடன்,
S. தமிழ்மணி,
தலைவர்
S. ஹரிஹரன்,
கன்வீனர்
M. செல்வம்,
இணை கன்வீனர்,
CoC சேலம்
