BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் கூட்டமைப்பான, ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக, நாடு தழுவிய, "கோரிக்கை நாள்" மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், 16.07.2026 அன்று, சேலம் GM அலுவலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
AFFORDABILITY பிரிவை தளர்த்தி, BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வாதார பிரச்சனைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு, தோழர்கள் R. ஸ்ரீனிவாசன் (BSNLEU), B. சுதாகரன், (AIBDPA). V. குமார் (TNTCWU) கூட்டு தலைமை பொறுப்பேற்றனர். போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து, தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், BSNLEU துவக்கவுரை வழங்கினார். FCCPA கூட்டமைப்பின் மாநில நிர்வாகி, தோழர் K. R. கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.
AIBDPA மாநில அமைப்பு செயலர் தோழர் S. அழகிரிசாமி, TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், AIBDPA மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை வழங்கினார்கள். ஒருங்கிணைப்பு குழுவின் கன்வீனர், தோழர் S. ஹரிஹரன் நிறைவுரை வழங்கினார்.
விண்ணதிரும் கோஷங்களை, தோழர் "கோச" செல்வம், (மாவட்ட உதவி செயலர், TNTCWU) எழுப்ப, மாவட்டம் முழுவதிலுமிருந்து, திரளாக கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட நமது தோழர்கள் உற்சாகமாக வழி மொழிந்தனர். இறுதியாக, தோழர் P. தங்கராஜு, மாவட்ட பொருளர், ஊதிய மாற்ற போராட்ட வரலாற்றை நினைவு கூர்ந்து, நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
BSNLEU தர்மபுரி மாவட்ட சங்கம் சார்பாக, சேலம் மாவட்ட CoCக்கு, கோரிக்கை நாள் அடையாள அட்டை அச்சடித்து வழங்கப்பட்டதை, நமது தோழர்கள் அணிந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கோரிக்கை அட்டை அச்சடித்து வழங்கிய, தர்மபுரி மாவட்ட சங்கத்திற்கு, CoC சார்பாக நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
அதே போல், மாவட்டம் முழுவதுமிருந்து, கடுமையான வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், இயக்கத்தில் உற்சாகமாய் கலந்து கொண்ட, BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களுக்கும், கணிசமான எண்ணிக்கையில் கலந்து கொண்ட நமது பெண் தோழர்களுக்கும், CoC தனது நன்றியை, உரித்தாக்குகிறது.
நாடு முழுவதும், போராட்டம் உற்சாகமாய் நடைபெற்றுள்ளதாக, செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட இயக்கங்களான, 22.07.2026 முதல் 24.07.2026 வரை நடைபெறவுள்ள, மூன்று நாள் தர்ணா போராட்டத்திலும், முழுமையாக கலந்து கொண்டு, வெற்றி பெற செய்வோம்.



























