Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, May 28, 2026

போராட்ட நிதி!


ஒன்றிய அரசின், உழைப்பு சுரண்டல் கொள்கைகளுக்கு எதிராக, நொய்டாவில் போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, போராட்ட நிதி திரட்டுவது, ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்துவது என 02.05.2026 தமிழ் மாநில செயற்குழு மற்றும் 07.05.2026 இணைய வழி சிறப்பு கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மாநில முழுவதிலும், மாவட்டங்களில் இருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.42,380ஐ, BSNLEU தமிழ் மாநில சங்கம் சார்பாக, CITU மூத்த தலைவர் தோழர் A.சௌந்தரராஜன் அவர்களிடம், 24.05.2026 அன்று, சென்னையில், தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் CVP BSNLEU மற்றும் தோழர் K.சீனிவாசன் ACS BSNLEU ஆகியோர் வழங்கினார்கள் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அடக்குமுறைகளை எதிர்த்து கடுமையாக போராடி வரும் நொய்டா தொழிலாளர்களுக்கு, BSNLEU சேலம் மாவட்ட சங்கம், தனது பங்களிப்பாக, ரூ.6,710ஐ, BSNLEU தமிழ் மாநில சங்கத்திடம் வழங்கியுள்ளது என்பதையும், மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்