Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, April 30, 2026

தோழர் K. சண்முகசுந்தரம், DVP பணி நிறைவு பாராட்டு விழா!




28.04.2026  அன்று எடப்பாடி ஸ்ரீ பர்வத ராஜ குல சமுதாயக் கூடத்தில், தோழர் K. சண்முகசுந்தரம், மாவட்ட உதவி தலைவர், அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, சிறப்பாக நடைபெற்றது. விருந்தோம்பல் உபசரிப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழா, சிறப்பான பாராட்டு விழாவாக நடைபெற்றது. விழாவிற்கு, தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர், BSNLEU தலைமை தாங்கினார்.  திருச்செங்கோடு BSNL AGM திரு தங்கராஜ் உள்ளிட்ட BSNL அதிகாரிகள் முன்னிலை வகிக்க, தோழர் P. சண்முகம், AIBDPA கிளை செயலர், வரவேற்புரை வழங்கினார்.

AIBDPA மாநில அமைப்பு செயலர் தோழர் S. அழகிரிசாமி, AIBDPA மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, BSNLEU மாவட்ட செயலர் தோழர் S. ஹரிஹரன் ஆகியோர் தோழரை வாழ்த்தி, சிறப்புரை வழங்கினார்கள். அதன் பின், BSNL அதிகாரிகள், நகர முக்கிய பிரமுகர்கள், தோழர்கள், தோழர் K.  சண்முகசுந்தரம் அவர்களை வாழ்த்தி கௌரவப்படுத்தினார்கள். 

BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் A. தாமரைச்செல்வன், T. கார்த்திகேயன், J. மணி, BSNLEU ஓமலூர் கிளை செயலர் தோழர் S. சமரன், திருச்செங்கோடு கிளை செயலர் தோழர் V. பரந்தாமன், மேட்டூர் கிளை செயலர் தோழர் M. கோபாலன், AIBDPA  மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P. தங்கராஜு, P. M. ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். தோழர் K. சண்முகசுந்தரம் ஏற்புரை வழங்கியபின், தோழர் S. சமரன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

சிறப்பான அறுசுவை உணவை விருந்தோம்பலாக வழங்கியதோடு, BSNLEU மாநில, மாவட்ட சங்கங்களுக்கு நன்கொடை, AIBDPA சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டது என சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த, தோழர் K. சண்முகசுந்தரம், DVP அவர்களின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய, BSNLEU சேலம் மாவட்ட சங்கம் தோழமையோடு வாழ்த்துகிறது. 

தோழமையுடன்,

S. ஹரிஹரன், 

மாவட்ட செயலர்