CMD BSNLஐ சந்தித்த BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, ஊழியர்களுக்கான புதிய பதவி உயர்வு கொள்கையில் தலையீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஊழியர்களுக்கான பதவி உயர்வு கொள்கையை மறு பரிசீலனை செய்ய, ஒரு குழு அமைப்பது என 40-வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், 15 மாத காலம் கழிந்த பின்னரும், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோடு எந்த ஒரு கூட்டத்தையும், அந்த குழு நடத்தவில்லை.
20.04.2026 அன்று CMD BSNLஐ சந்தித்த BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, கார்ப்பரேட் அலுவலக HR நிர்வாகத்தின் எதிர்மறை அணுகுமுறை மீது, தனது ஆழ்ந்த அதிருப்தியை தெரியப்படுத்தினார். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பதவி உயர்வு கொள்கைகளில் உள்ள பாரபட்சங்கள் தொடர்பாக, ஊழியர்களிடையே ஆழ்ந்த வருத்தங்கள் உள்ளதையும் அவர் தெரியப் படுத்தினார். இதனை பரிசீலிக்க, 2025, ஏப்ரல் மாதத்தில், PGM (ADMN) தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்ட போதும், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் விவாதிக்க, இதுவரை எந்த ஒரு கூட்டமும் கூட்டப் படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த அதீத கால தாமதத்திற்கு தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்த பொதுச் செயலாளர், ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு கொள்கையை இறுதிப் படுத்துவதற்கு வழிவகை செய்யக்கூடிய வகையில், இதற்கான ஒரு கூட்டத்தை விரைவில் கூட்டுவதற்கு, CMD BSNL தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிப்பதாக, CMD BSNL உறுதி அளித்தார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல் : BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
