BSNL ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாடு ஒப்பந்த கோப்பு, BSNL இயக்குனர் குழுவின் ஒப்புதலோடு, 23.02.2026 அன்று, தொலைதொடர்பு துறைக்கு அனுப்பப்பட்டு விட்டது என்பது ஒரு நல்ல செய்தியாகும். 12.02.2026 அன்று நடைபெற்ற BSNL இயக்குனர் குழு கூட்டத்தில், ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாட்டிற்கு, இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கியது. DoTயிடம், தனது தளர்வதில்லாத, தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் ஒப்புதல் பெறுவதை உறுதி செய்வதோடு, ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாடு, விரைவில் அமலாக்கப்படுவதற்கான, அனைத்து முயற்சிகளையும், BSNLEU மத்திய சங்கம் மேற்கொள்ளும் என தகவல் வந்துள்ளது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்
