கடும் அதிருப்தியை தெரிவித்த, இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும், ஊழியர்களின் தேங்கியுள்ள பிரச்சனைகளை விரைவில் தீர்வு காண வேண்டும் என கோரி உள்ளன.
ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, 05.02.2026 அன்று கொடுத்திருந்த மகஜரின் அடிப்படையில், 18.02.2026 அன்று, DIRECTOR (HR)உடன், ஒரு அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த விவாதத்தின் போது, ஊழியர்களின், 15-க்கும் மேற்பட்ட முக்கியமான பிரச்சனைகள், நிர்வாகத்துடன் பேசப்பட்டன. இந்தப் பிரச்சனைகளை தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள நீண்ட கால தாமதத்திற்கு, ஊழியர் தரப்பு, தங்களின் அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்தது.
ஊழியர் தரப்பில், தோழர் அனிமேஷ் மித்ரா GS BSNLEU, தோழர் சந்தேஸ்வரர் சிங் GS NFTE, தோழர் M.விஜயகுமார் PRESIDENT BSNLEU, தோழர் இர்ஃபான் பாஷா TREASURER BSNLEU, தோழர் அஸ்வின் குமார் AGS BSNLEU, தோழர் உத்தம் குமார் Dy. GS NFTE மற்றும் தோழர் மகாவீர் சிங் SECY NFTE ஆகியோர் பங்கேற்றனர். நிர்வாக தரப்பில் மரு கல்யாண் சாகர் நிப்பானி DIRECTOR (HR), திரு S.P.சிங் PGM ESTT மற்றும் திரு ராஜிவி கவுசிக் PGM SR ஆகியோர் பங்கேற்றனர்.
ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாட்டிற்கு, BSNL இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கி விட்டது என்பதை, துவக்கத்திலேயே ஊர்ஜிதப்படுத்திய DIRECTOR (HR), 16.02.2026 அன்று, அதன் பதிவுகள் வெளியிடப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அது விரைவில் DoTக்கு அனுப்பப்படும் என்பதும் தெரிவிக்கப் பட்டது. ஊதிய உடன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியதற்கு, நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவிக்கின்ற அதே வேளையில், நீண்ட காலமாக தேங்கியுள்ள, பல ஊழியர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்பதற்கு, தங்களது கடுமையான எதிர்ப்பையும், வருத்தத்தையும் ஊழியர் தரப்பு, பதிவு செய்தது. இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடனும், தேசிய கவுன்சில் கூட்டங்கள் மற்றும் முந்தைய அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும் விவாதிக்கப் பட்டிருந்த போதும், உறுதியான தீர்வுக்கு வராமல், நிர்வாகம், பல்வேறு மாறுபட்ட அணுகுமுறைகளை கடை பிடிப்பதை, இந்தக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.
2026 மார்ச் மாதத்திற்குள், ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, விவாதத்தின் போது DIRECTOR (HR)மற்றும் நிர்வாகத் தரப்பு உறுதி கூறின. இதன் பதிவுகளை, நிர்வாகம் வெளியிடும் என்று, ஊழியர் தரப்பு காத்துக் கொண்டுள்ளது. மேலும், உறுதியளிக்கப் பட்டுள்ள கால வரையறைக்குள், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனில், CMD BSNLன் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், போராட்ட இயக்கங்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று, நிர்வாகத்திற்கு தெளிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLEU
முழுமையான அறிக்கை காண இங்கே சொடுக்கவும்

