2025, நவம்பர் மாதத்தில் அமைச்சரவையின் நியமனக் குழு, பெரிய அதிகார மாற்றங்களை அங்கீகரித்ததன் அடிப்படையில், 2026, ஜனவரி 1 முதல், மூத்த IAS அதிகாரி திரு அமித் அகர்வால், தொலைதொடர்பு துறையின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்த பொறுப்பில் இருந்த திரு நீரஜ் மிட்டல், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின், செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். 1993 பட்டியலில், சதீஷ்கர் மாநில IAS அதிகாரியான இவர், கான்பூர் IIT மாணவர். இதற்கு முன் PHARAMACEUTICALS இலாகா செயலாளராக பணியாற்றிய இவர், UIDAIயின் CEO, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் உள்ளிட்ட, பல முக்கியமான பொறுப்புகளை கவனித்திருந்தார்.
தொலைத் தொடர்பு துறையின் செயலாளராக இவர், 5G, 6G விஸ்தரிப்பு, அலைக்கற்றை மேலாண்மை, BSNL மற்றும் MTNL ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் புத்தாக்கம் உள்ளிட்ட கேந்திரமான பணிகளை மேற்கொள்வார். இவருடைய பணிக்காலம் 2030, ஜூன் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்
