Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, January 3, 2026

புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்!


01.01.2026 அன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, வழக்கமான உற்சாகத்துடன், புத்தாண்டு வாழ்த்துக்களை, நமது தோழர்களோடு பகிர்ந்து கொண்டோம். முதலில் GM அலுவலகம் சென்று, சேலம் BSNL  பொது மேலாளர் திரு ரவீந்திர பிரசாத், ITS., உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பின், சேலம் GM அலுவலக கிளை, செவ்வை, சேலம் மெயின் கிளைகளுக்கு சென்று நமது தோழர்களோடு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம். 

பொதுவாக, மாவட்டம் முழுவதும், நமது கிளை சங்கங்கள், நமது தோழர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, CoC சார்பாக, BSNLEU மாவட்ட சங்க நோட்டீஸ் வழங்கி, இனிப்புகள் கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்கள். நாமக்கல், ஆத்தூர் கிளைகள் அனுப்பிய படங்களும் பகிரப்பட்டுள்ளது. நிகழ்வில் AIBDPA / TNTCWU சங்க தலைவர்கள் /  தோழர்கள் கலந்து கொண்டது, சிறப்பம்சமாகும். 























சேலம் மெயின் 





செவ்வை



ஆத்தூர் 




நாமக்கல் 







ராசிபுரம் 




பரமத்தி வேலூர்