13.12.2025 அன்று சென்னை கிண்டியில் உள்ள, தென்சென்னை CITU மாவட்ட சங்க அலுவலகத்தில், BSNLEU மாநில செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. காலையில் சென்னை தொலைபேசி மாநில சங்கத்துடன் இணைந்து பொது அரங்கம் நடைபெற்றது. உணவு இடைவேளைக்குப்பின், தனித்தனியாக இரு மாநில செயற்குழுக்கள் நடைபெற்றது. தமிழ் மாநில செயற்குழு அதே இடத்தில், மதியம் துவங்கி, மாலை 7 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
நமது சேலம் மாவட்டத்தில் இருந்து தோழர்கள் S. ஹரிஹரன், M. சண்முகம், கலந்து கொண்டு, மாவட்ட சங்க கோரிக்கைகளை, பிரச்சனைகளை முன்மொழிந்தனர்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
விரிவான மாநில செயற்குழு முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்






















