Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, November 11, 2025

ஷ்ரம் சக்தி நிதி - 2025 - பிரச்சார இயக்கம்


ஷ்ரம் சக்தி நிதி - 2025க்கு நமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தும்,  அதன் மீதான நமது தெளிவான கருத்துக்களை எடுத்துக் கூறியும், நவம்பர் மாத டெலி குருசேடர் பத்திரிக்கையில், BSNLEU மத்திய சங்கம் ஒரு தலையங்கம் வெளியிட்டுள்ளது. இந்த இதழின் தலையங்கத்தை நமது அனைத்து தோழர்களும் கவனமாக படிக்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது.    அதிகாரபூர்வமாக, 2025, அக்டோபர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தொழிலாளர் கொள்கையின் மூலம், மோடி அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்களின், ஆழ, அகலங்களை பற்றி இந்த தலையங்கம் விரிவாக தெளிவுபடுத்துகிறது.

மேலும், நவம்பர் மாத WORKING CLASS பத்திரிக்கையில்,  CITU செயலாளர் தோழர் K.N. உமேஷ், இந்தக் கொள்கை தொடர்பாக விரிவாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை ஒன்றும், வெளியிடப் பட்டுள்ளது.   அதில், பணி பாதுகாப்பின் மீதான தாக்கம், தொழிற்சங்க உரிமைகள் மற்றும் கூட்டு பேர சக்தியின் எதிர்காலம் உள்ளிட்டவற்றின் மீது, இந்தக் கொள்கை ஏற்படுத்தும் தாக்கத்தை அம்பலப் படுத்துவதாக, இந்த கட்டுரை உள்ளது.  

நவம்பர் மாத TELECRUSADER பத்திரிக்கையின் தலையங்கத்தையும், WORKING CLASS பத்திரிக்கையில் வெளிவந்துள்ள அந்த கட்டுரையையும், உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மத்தியில் விநியோகிக்க வேண்டும் என, மத்திய சங்கம், மாநில மற்றும் மாவட்ட செயலாளர்களை கேட்டுக் கொள்கிறது.  அலுவலக கூட்டங்கள், கிளை கூட்டங்கள் மற்றும் பிரச்சார கூட்டங்களில், இந்த தகவல்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பு இயக்கத்திற்கு, ஒட்டுமொத்த ஊழியர்களையும் தயார் படுத்த வேண்டும்.  ஒவ்வொரு ஊழியரிடமும் இந்தப் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட வேண்டும்.  தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பு மற்றும் ஜனநாயக தொழிற்சங்க செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதான, இந்த புதிய தாக்குதல்களை அம்பலப்படுத்தி, ஒன்றுபட்டு எதிர்த்து வெற்றி பெறுவோம்.

தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர் BSNLEU

WORKING CLASS பத்திரிக்கை கட்டுரை காண இங்கே சொடுக்கவும் 

TELECRUSADER பத்திரிக்கையின் தலையங்கம் காண இங்கே சொடுக்கவும்