Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, October 15, 2025

பண்டிகை கால முன்பணம் - CMD BSNLக்கு கடிதம்


பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என கடந்த ஓராண்டுக்கு மேலாக, BSNL ஊழியர் சங்கம் கோரி வருகின்றது. இதற்கு சாதகமாக பதில் அளித்த CMD BSNL, விரைவில் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். எனினும், பண்டிகை கால முன்பணம் வழங்குவதற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

2025, அக்டோபர் 20ஆம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தற்செயலாக, BSNL நிறுவனமும், தனது வெள்ளி விழாவை, இந்த அக்டோபர் மாதத்தில் கொண்டாடியுள்ளது. இந்த மாதத்தில், பண்டிகைக்கால முன்பணத்தை நிர்வாகம் மீண்டும் வழங்கும் என உத்தரவிட்டு, தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு அந்த முன்பணத்தை வழங்கியது என்று சொன்னால், அது ஒரு நல்ல சைகையாக இருக்கும் என்று, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது.  

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்