DoTயில் DDG (Standards, Research & Innovation) ஆக பொறுப்பில் உள்ள திரு A.ராபர்ட் J.ரவி அவர்கள், தற்போது, கூடுதலாக CMD BSNL ஆகவும் பொறுப்பு வகிக்கிறார். 2025 அக்டோபர் 15 முதல், 2026, ஜனவரி 14 வரையிலான 3 மாதம் அல்லது நிரந்தர CMD BSNL நியமிக்கப்படும் வரை, இதில் எது முதலில் நடைபெறுகிறதோ, அது வரை திரு A.ராபர்ட் J.ரவி அவர்களுக்கு, CMD BSNLஆக பதவி நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது என பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த காலத்திற்கு திரு A.ராபர்ட் J.ரவி அவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப் பட மாட்டாது என்றும் அறிவிப்பு தெரிவிக்கின்றது.
[நன்றி: The ENS Economic Bureau updated on 15th Oct., 2025]
