CMD BSNL திரு A. ராபர்ட் J. ரவி அவர்களுடன் இன்று (03.09.2025) நடைபெற்ற சந்திப்பின்போது, BSNL ஊழியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், CMD BSNLஇடம் அறிமுகப் படுத்தப்பட்டனர். முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, தலைவர் தோழர் M.விஜயகுமார், பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா, துணைப் பொதுச் செயலாளர் தோழர் கணேஷ் ஹிங்கே மற்றும் தோழர் இர்ஃபான் பாஷா பொருளாளர் ஆகியோரை, CMD BSNLஇடம் அறிமுகப் படுத்தினார்.
இந்த அறிமுக கூட்டத்தில், ஊதிய மாற்றத்தை விரைவில் தீர்வு காண்பதற்கு, CMD BSNLன் தலையீடு தேவை என, BSNLEU தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதிகாரிகளுக்கு வழங்குகின்ற ஊதிய நிர்ணய பலனை, ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். எந்த ஒரு தொழிலாளிக்கும், ஊதிய குறைப்பு மற்றும் ஊதிய தேக்க நிலை ஆகியவை வராமல் தவிர்க்க, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்த ஊதிய மாற்றத்தில் அமலாக்கப் படும் ஊதிய விகிதங்கள், அடுத்த ஊதிய மாற்றத்திற்கான அடிப்படையாக இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.
மேலே தெரிவிக்கப்பட்ட பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக, CMD BSNL உறுதி அளித்தார்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்