மொபைல் தொலைபேசி வாங்கியதற்கான பணத்தை, நிர்வாகம், அதிகாரிகளுக்கு திரும்ப வழங்குகிறது. இந்த வசதி, அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம், தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், அவற்றை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதற்கிடையில், மொபைல் ஆப் மூலம் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களும், தங்களுடைய வருகையை பதிவு செய்ய வேண்டும் என, கார்ப்பரேட் அலுவலகம் இன்று (08.07.2025) ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. மொபைல் ஆப் மூலம், முக அடையாளப் படுத்துதலுடன் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒன்று, நிர்வாகம் ஊழியர்களுக்கு மொபைல் தொலைபேசி வழங்கிவிட்டு, அவர்களை மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும் என கூற வேண்டும், அல்லது, அதிகாரி அல்லாத ஊழியர்களுக்கு, மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்யும் உத்தரவிலிருந்து நிர்வாகம், விலக்கு அளிக்க வேண்டும். கார்ப்பரேட் அலுவலக உத்தரவிற்கு, உடனடியாக எதிர்வினை ஆற்றிய BSNL ஊழியர் சங்கம், மொபைல் தொலைபேசி வாங்கியதற்கான பணத்தை திரும்ப வழங்கும் வசதி, அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்படும் வரை, மொபைல் ஆப் மூலம் வருகையை பதிவு செய்வதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, DIRECTOR (HR)க்கு, உடனடியாக கடிதம் எழுதி உள்ளது.
தோழமையுடன்
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்