வேலை நிறுத்த தயாரிப்பு கூட்டம், BSNLEU மாவட்ட செயற்குழு, தோழர் P. செல்வம் பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா சேலம் மெயின் தொலைபேசி நிலைய, OCB கூட்ட அரக்கில், 04.07.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் தலைமை தாங்க, தோழியர் C. லாவண்யா மாவட்ட உதவி செயலர் அஞ்சலியுரை வழங்க, தோழர் C. மாணிக்கம், மெயின் கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார். ஆய்படு பொருள் ஏற்புக்கு பின், அதனை அறிமுகப்படுத்தி, தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர் அறிமுகவுரை வழங்கினார். அவர் தம் உரையில், 09.07.2025 ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவம், வேலை நிறுத்தத்தை நமது சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது சம்பந்தமாக செய்துள்ள முன்னேற்பாடுகள், ஊழியர் சந்திப்பு இயக்கம், 3வது ஊதிய மாற்றம், TCS நிறுவனம் வழங்கும் 4G சேவை குறைபாடு, நடைபெற்ற இயக்கங்கள், தளமட்ட அளவிலான பிரச்சனைகள், ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார். தவிர்க்க முடியாத சில காரணங்களால், மாநில செயலர் கூட்டத்திற்கு வர இயலவில்லை. ஆய்படு பொருள் மீதான விவாதத்தில், கிளை செயலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்த பின் மாவட்டச் செயலர் தொகுப்புரை வழங்கினார். ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்குவது, 11வது அகில இந்திய மாநாட்டு நிதி உள்ளிட்ட முக்கிய முடிவுகள் ஏகமனதாக ஏடுக்கப்பட்டது. BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம் நிகழ்வில் கலந்து கொண்டார். BSNLWWCC மாநிலகுழு உறுப்பினர் தோழியர் D. கவிதா, மாவட்ட குழு தோழர்களோடு நிகழ்வில் கலந்து கொண்டார்.
பின்னர் துவங்கிய பணி நிறைவு பாராட்டு விழாவில், சேலம் மாவட்ட BSNLEU சங்கம் சார்பாக தோழர் P. செல்வம் கௌரவப்படுத்தப்பட்ட பின், அவர் சார்ந்த சேலம் மெயின் கிளை சார்பாகவும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். AIBDPA சேலம் மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, AIBDPA மாநில உதவி செயலர் தோழர் E. கோபால், AIBDPA மாநில அமைப்பு செயலர் தோழர் S. அழகிரிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, தோழர் செல்வம் அவர்களை கௌரவப்படுத்தினார்கள். மூன்று தலைவர்களும், வேலை நிறுத்த போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கி, தோழரை வாழ்த்தினார்கள். 11வது அகில இந்திய மாநாட்டு நிதியை, மண நிறைவான வகையில், BSNLEU மாவட்ட சங்கத்திடம், தோழர்களின் பலத்த கரகோசங்களுக்கு மத்தியில், AIBDPA செயற்குழு உறுப்பினர்கள் ஒன்று திரண்டு, உற்சாகமாக வழங்கினார்கள். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், மாநில பொருளர் தோழர் C. பாஸ்கர், மாவட்ட பொருளர் தோழர் V. குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். BSNLEU 11வது அகில இந்திய மாநாட்டு நிதி உணர்வு பூர்வமாக வழங்கினார்கள். மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளான ஒப்பந்த ஊழியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
நிர்வாக தரப்பில், திரு C. பாஸ்கரன், DGM HQ அவர்கள் தலைமையில், திரு G. சேகர், AGM, திரு V. செந்தில், AGM, திரு S. அர்த்தனாரி, AGM, திரு K. அருண்குமார், SDE, திரு D. ராமச்சந்திரன். AO (P&A), திரு G. விஜய் ஆனந்த், JAO உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தோழரை கௌரவப்படுத்தினார்கள். அதேபோல், SNEA சங்கம் சார்பாக, அதன் மாவட்டச் செயலர் தோழர் K. சீனிவாசன் தலைமையில், திருமதி நித்யா, JTO, திரு செந்தில்குமார், JTO ஆகியோர் வந்து தோழரை வாழ்த்தினார்கள். மத்திய மாநில பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர் கூட்டமைப்பு, அஞ்சல் / RMS ஒய்வூதியர் கூட்டமைப்பு, NCCPA கூட்டமைப்பு தலைவர்கள், தோழர்கள் நேதாஜி, KRG, சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள், AIBSNLPWA சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் M. கணேசன், AIBSNLPWA, மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M. பன்னீர்செல்வம், மோகனசுந்தரம், ஓய்வு பெற்ற அதிகாரி திரு கண்ணன் பாலா, SDE (RTD), தோழர் தேவா தலைமையில், மேனாள் NFTE ஆளுமைகள், நிர்வாகிகள் என பலர் தோழரை கௌரவப்படுத்தினார்கள். SNPWA மாவட்டச் செயலர் தோழர் R. மனோகரன் உள்ளிட்ட தோழமை சங்க தலைவர்கள், BSNLEU - AIBDPA - TNTCWU 3 சங்க மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், BSNLWWCC தோழர்கள், தோழர் செல்வம் குடும்பத்தார், நண்பர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்ட தோழர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
கடந்த 05.02.2025 அன்று நடைபெற்ற 11வது மாவட்ட மாநாட்டிற்கு பின், பணி நிறைவு பெற்ற நமது தோழர்களை, கிளை சங்கங்கள் சார்பாக விழாக்கள் நடைபெறாத தோழர்களை, கௌரவப்படுத்த கிளை சங்கங்கள் வாயிலாகவும், மாவட்ட சங்கம் சார்பாகவும், அழைப்பு விடுத்திருந்தோம். அதன்படி, நம் அழைப்பை ஏற்று, விழாவிற்கு வந்த தோழர்களை, கௌரவப்படுத்தினோம். இறுதியாக, தோழர் P. செல்வம் ஏற்புரை வழங்கினார். அவரை தொடர்ந்து, தோழர் R. ரமேஷ் மாவட்ட பொருளர் நன்றி கூறி, நிகழ்ச்சிகளை முடிக்க வைத்தார். பின்னர், அறுசுவை மதிய உணவு தோழர் செல்வத்தால் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மொத்தத்தில், மகிழ்ச்சிகரமான, வெற்றிகரமான, பிரம்மாண்டமான முப்பெரும் விழாவாக, இந்த விழா அமைந்தது என்பது எதார்த்தம்.