Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, July 16, 2025

மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்!


நாள் : 17.07.2025, வியாழக்கிழமை 

நேரம் மதியம் 12.30 மணியளவில் 

இடம்:  சேலம் மெயின் தொலைபேசி நிலையம் 

மாநில தலைமை பொது மேலாளர், CGM., TN Circle, அவர்களின் தொழிற்சங்க விரோத போக்கு, நிறுவன வருவாய் மற்றும் சேவை மேம்பாடு குறித்த மெத்தனப்போக்கு உள்ளிட்ட விஷயங்களை எதிர்த்து, 17.07.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த, நமது மாநில சங்கங்கள் அறைகூவல்  கொடுத்திருப்பதை அறிவீர்கள்.

அதன் அடிப்படையில், நமது சேலம் மாவட்டத்தில், BSNLEU - SNEA - AIGETOA சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, இணைந்த மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், 17.07.2025 அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெறும்.

BSNLEU - SNEA - AIGETOA மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர், BSNLEU
K. ஸ்ரீனிவாசன், 
மாவட்ட செயலர், SNEA
V. அன்பழகன்,  
மாவட்ட செயலர், AIGETOA
சேலம்