09.07.2025 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என, BSNLEU மற்றும் NFTE BSNL சங்கங்கள் முடிவெடுத்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும், 02.07.2025 அன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த, BSNLEU மற்றும் NFTE BSNL சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
நான்கு தொழிலாளர் தொகுப்புகளை எதிர்ப்பது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை எதிர்ப்பது, BSNLலில் ஊதிய மாற்ற பிரச்சனையை உடனடியாக தீர்வு காண வலியுறுத்துவது, BSNL வாடிக்கையாளர்களுக்கு தரமான 4G & 5G சேவைகளை வழங்குவது, 2வது VRS திட்டத்தை எதிர்ப்பது, ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு கொள்கை அமலாக்குவது, மனித வள கொள்கையை மறுபரிசீலனை செய்வது, ஊழியர்களுக்கான இலாகா தேர்வுகளில், தேவையான காலிப் பணியிடங்களை உறுதி செய்வது, கண்மூடித்தனமாக BSNL பணிகளை OUTSOURCING விடுவதை நிறுத்துவது, FTTHல் TIPகளை நீக்குவது, ஒப்பந்த ஊழியர்களை உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்குவதை நிறுத்துவது மற்றும் அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி, EPF மற்றும் ESI ஆகியவற்றை உறுதி செய்வது ஆகிய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளை, இந்த கூட்டத்தில் விளக்க வேண்டும்.
மத்திய சங்கம் வெளியிட்டுள்ள விரிவான நோட்டீஸ், கூட்டு போராட்ட பிரகடனம், மாவட்ட சங்கம் வெளியிட்டுள்ள நோட்டீஸ் ஆகியவை கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை கிளைகள் முழுமையாக பயன்படுத்தி, பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். நமது சேலம் மாவட்டத்தில், இந்த இயக்கம், CoC சார்பாக நடைபெறவுள்ளது. அதன்படி, 02.07.2025 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், அவர்தம் கிளைகளில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகளை பயன்படுத்தி, இயக்கத்தை சக்திமிக்கதாக நடத்தி, ஊழியர்களை வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயுத்த படுத்த வேண்டும். நிகழ்ச்சியின் படங்களை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
கன்வீனர்
S. தமிழ்மணி,
தலைவர்
M. செல்வம்,
இணை கன்வீனர்
CoC., சேலம்
குறிப்பு : சேலம் நகர கிளைகள் சார்பாக, 02.07.2025 புதன்கிழமை அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், நண்பகல் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.