Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, June 24, 2025

வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு, மேலும் சலுகைகளை வழங்க விரும்பும் இந்திய அரசாங்கம்


வோடபோன் என்பது பிரிட்டிஷ் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம்.  அதன் இந்திய கிளையின் பெயர் தான் வோடோபோன் ஐடியா. இருந்த போதும், வோடபோன் ஐடியா நிறுவனத்தை, பொருளாதார நெருக்கடியில் இருந்து, ஏதாவது ஒரு வழியில் காப்பாற்ற, இந்திய அரசாங்கம் விரும்புகிறது. இந்திய அரசாங்கத்திற்கு வோடபோன் ஐடியா நிறுவனம், AGR நிலுவையாக 58,254 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  அது வட்டி, அபராதம் மற்றும் வட்டியின் மீதான அபராதம் உள்ளிட்டவைகளை சேர்த்து, 2025 மார்ச் மாதத்தில், 83,400 கோடி ரூபாய்களாக சேர்ந்துள்ளது.  

2025, மார்ச் மாதத்தில் அதில் 36,950 கோடி ரூபாய்களை, அந்த நிறுவனத்தின் பங்குகளாக அரசு மாற்றிக் கொண்டது.  தற்போது, அந்த நிறுவனத்தின் 49.99% பங்குகளோடு, இந்திய அரசாங்கம் தான், வோடபோன் ஐடியா நிறுவனத்தின், மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.  ஆனாலும், வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாகத்தில், இந்திய அரசாங்கத்திற்கு, எந்த ஒரு பிரதிநிதித்துவமும் இல்லை.மீதமுள்ள AGR நிலுவைகளை அரசாங்கத்திற்கு கட்ட, அந்த நிறுவனத்தால்  இயலவில்லை.  

இந்தச் சூழ்நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு மேலும் சலுகைகளை வழங்க, பல்வேறு வழிகளை இந்திய அரசாங்கம் யோசித்துக் கொண்டிருப்பதாக, பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.  அந்த நிறுவனம், பணத்தை திருப்பித் தர வேண்டிய காலக்கெடுவான ஆறு வருட காலத்தை, 20 வருட காலமாக உயர்த்தும் ஒரு திட்டத்தை,  அரசாங்கம் யோசித்துக் கொண்டுள்ளது. நிலுவைத் தொகைக்கு, கூட்டு வட்டிக்கு பதிலாக சாதாரண வட்டி போடவும் அரசாங்கம் யோசித்துள்ளது. AGR பிரச்சனையில் இறுதி முடிவு எடுக்கும் வரை, வருடத்திற்கு மொத்தமாக ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்கள் வரை, பகுதி பணமாக பெற்றுக் கொள்வது என்பது இரண்டாவது திட்டம்.

தோழர் P.அபிமன்யு, 
பொதுச் செயலாளர்

(ஆதாரம்:- ECONOMIC TIMES DT.24.06.2025)