Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, May 15, 2025

வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது!


அனைத்து மத்திய தொழிற்சங்ககளின் சார்பாக, 20.05.2025 அன்று நடைபெற இருந்த அகில இந்திய வேலை நிறுத்தம், நாட்டில் நிலவும் சூழலை கணக்கில் கொண்டு, 09.07.2025 என்கிற தேதிக்கு ஒத்தி வைக்க, இன்று, 15.05.2025 நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டுள்ளது. BSNL நிறுவனத்தில் BSNLEU மற்றும் NFTE சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என முடிவெடுத்து, போராட்ட அறைகூவல் கொடுத்திருந்தது. மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு முடிவுக்கு கட்டுப்பட்டு, BSNLEU மத்திய சங்கமும், இந்த போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு எடுத்துள்ளது. வரும், 20.05.2025 அன்று மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில், போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய, கடுமையாக கள பணியாற்றிய, மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், கிளைச் செயலர்களுக்கும், BSNLEU சேலம்  மாவட்ட சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. CoC பதாகையின் கீழ், AIBDPA மற்றும் TNTCWU சங்கங்கள் சார்பாக கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பும், மகத்தானது. வேலை நிறுத்தத்தில் முழுமையாக கலந்து கொள்வோம் என உறுதியளித்த தோழர்களின் போராட்ட குணாம்சமும் பாராட்டுக்குரியது.

மத்திய சங்க அறைகூவல் அடிப்படையில், CoC சார்பாக, சேலம் GM அலுவலகத்தில், 20.05.2025 அன்று, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், நடைபெறும். 09.07.2025 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கான, தயாரிப்பு இயக்கமாக, இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திடுவோம். 

நன்றி கலந்த வணக்கங்களுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்டச் செயலர்