01.05.2025 அன்று, சேலம் மெய்யனுர் தொலைபேசி நிலைய LMR அறையில், மெய்யனுர் கிளை செயலர் தோழர் M. ஜோதி சிவம் அவர்களுக்கு, எளிமையான, ஆனால், வலிமையான, பணி நிறைவு பாராட்டு விழா. நடைபெற்றது. முறையாக கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் R. ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். GM அலுவலக கிளை செயலர் தோழர் R. முருகேசன் வரவேற்புரை வழங்கினார்.
தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், துவக்கவுரை வழங்கி, தோழரை மாவட்ட சங்க நிர்வாகிகளோடு சேர்ந்து, மாவட்ட சங்கம் சார்பாக, கௌரவப்படுத்தினார். AIBDPA தமிழ் மாநில உதவி செயலர் தோழர் E. கோபால் விழா பேருரை வழங்கி, தோழரை கௌரவப்படுத்தினர்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் R. ராதாகிருஷ்ணன், J. ஸ்ரீனிவாசராஜு, GM அலுவலக கிளை செயலர் தோழர் R. முருகேசன், கிளை நிர்வாகிகள் தோழர்கள் R. லோகநாதன், R. சங்கர், செவ்வை கிளை செயலர் தோழர் N. சிவகுமார், மெயின் கிளை சார்பாக தோழர்கள் P. செல்வம், P. பத்மநாபன், BSNLWWCC மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் L. வனிதா என திரளாக தோழர்கள், தோழர் ஜோதி சிவத்தை, வாழ்த்தி பேசினார்கள்.
தோழர் ஜோதி சிவம் குடும்பத்தார் விழாவில் கலந்து கொண்டனர்.இறுதியாக தோழர் M. ஜோதி சிவம் ஏற்புரை வழங்கினார். தோழர் R. சங்கர், GM அலுவலக கிளை பொருளர், நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.