ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள அதீத கால தாமதம் காரணமாக, ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக அதிருப்தியில் உள்ளனர். 2024 டிசம்பர் மாதத்திற்கு பின், ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் நடைபெறாதது தொடர்பாக, தனது கடுமையான எதிர்ப்பை, நிர்வாகத்திடம் BSNL ஊழியர் சங்கம், ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் உறுப்பினர்களின் ஒருவரான, திரு P.C.பட் PGM (EF) அவர்கள், 2025 ஏப்ரல் 30ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில், அவருக்கு பதிலாக மற்றொரு அதிகாரியை நியமிக்கும் பணியில், நிர்வாகம் உள்ளதாக தெரிய வருகிறது.
கூட்டம் நடைபெறாததற்கு, இதனை காரணம் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்தை விரைவில் நடத்த, நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக, 13/04/2025 அன்று, திருமதி அனிதா ஜோஹ்ரி PGM (SR), பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யுவிடம் தெரிவித்தார். இது போன்ற உறுதிமொழிகள் ஏற்கனவே நிறைய வழங்கப்பட்டு விட்டது. ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டத்திற்கான தேதி, விரைவில் அறிவிக்கவில்லை என்றால், எதிர்ப்பு இயக்கம் நடத்துவது தவிர்க்க இயலாதது.