சட்ட மாமேதை, அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை, "அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு தினமாக" கடைப்பிடிக்க, BSNLEU மத்திய, மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்துள்ளது. தொன்று தொட்டு, நமது மாவட்டத்தில், பாரம்பரியமாக, வருடா வருடம், நாம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம்.
அதன்படி, வருகிற 14.04.2025 திங்கட்கிழமை அன்று, அனைத்து கிளைகளிலும், அண்ணல் அம்பேத்கர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, "அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு தினமாக" கொண்டாட வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். வழக்கம் போல், CoC சார்பாக, AIBDPA - TNTCWU சங்கத் தோழர்களையும் உடன் இணைத்து அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
லால் சலாம்!
ஜெய் பீம்!!
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
குறிப்பு:
சேலம் நகரப் பகுதி கிளை சங்கங்கள் சார்பாக, மாவட்ட சங்க அலுவலகத்தில், 14.04.2025 திங்கட்கிழமை, காலை 11.30 மணியளவில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் கொண்டாடப்படும். நகரப் பகுதி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், முன்னணி தோழர்கள், AIBDPA, TNTCWU தலைவர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.