Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, November 4, 2024

BSNLCCWF போராட்ட அறைகூவல் - LEO அவர்களிடம் மகஜர் வழங்குதல்!


நாள்: 05.11.2024, செவ்வாய்க்கிழமை, நேரம்:  காலை 10.30 மணி அளவில், இடம்: LEO அலுவலகம், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில்.


கடந்த 01.10.2024 அன்று புதுடில்லியில் நடைபெற்ற BSNLCCWF மத்திய செயற்குழு கூட்டத்தில், ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய அளவிலான கோரிக்கைகளை ஒன்று திரட்டி, இரண்டு கட்ட இயக்கங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல் கட்ட இயக்கமாக, 05.11.2024 அன்று நாடு முழுவதும் உள்ள LEO அலுவலகங்களுக்கு நேரில் சென்று, கோரிக்கை மகஜர் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. BSNLEU மத்திய செயற்குழுவும், இந்த இயக்கத்தை, வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அறைகூவல் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் ஏழு மையங்களில், மகஜர் கொடுக்கும் இயக்கம் நடைபெற TNTCWU மாநில செயற்குழு முடிவு எடுத்துள்ளது.நமது மாவட்டத்தில், சேலம், தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பாக, BSNLEU - TNTCWU சங்கங்கள் இணைந்து, நாளை (05.11.2024) சேலம் LEO அலுவலகத்தில் மகஜர் வழங்க உள்ளோம். 

BSNLEU - TNTCWU இரண்டு சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வாய்ப்புள்ள,  AIBDPA தோழர்கள் வருகை புரிந்தால், சிறப்பாக இருக்கும். LEO அலுவலகம் என்பது சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ளது.

தோழமையுடன்,
E. கோபால், 
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம், 
மாவட்ட செயலர், TNTCWU