நாள்: 27.11.2024, புதன்கிழமை, நேரம்: காலை 10.30 மணி முதல் இடம்: சேலம் மெயின் தொலைபேசி நிலையம்
BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF சங்கங்களின், CoC., ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், 07.10.2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், மூன்றாவது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், 4G / 5G சேவைகள், இரண்டாவது VRS உள்ளிட்ட பிரச்சனைகளை மைய படுத்தி, இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 25.10.2024 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றது.
இரண்டாம் கட்ட இயக்கமாக, 27.11.2024 அன்று, நாடு தழுவிய அளவில், மாவட்ட தலைநகரங்களில், தர்ணா போராட்டம் நடத்த, அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.
நமது சேலம் மாவட்டத்தில், CoC சார்பாக, வருகிற 27.11.2024, புதன்கிழமை அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் தர்ணா போராட்டம் நடைபெறும்.
கோரிக்கைகள்:
1) ஊதிய மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண வேண்டும்.
2) BSNLன் 4G மற்றும் 5G சேவைகளின் துவக்கத்தை விரைவு படுத்துக.
3) 2வது VRS திட்டத்தை கைவிடு.
4) ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்த பட்ச ஊதியம், EPF மற்றும் ESI ஆகியவற்றை அமல் படுத்துக.
5) கேசுவல் ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்கள் மற்றும் 2 தவணை பஞ்சப்படி ஆகியவற்றை வழங்கிடு.
எனவே, நமது மாவட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக்கிட, BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக தர்ணாவில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.