31.05.2024 அன்று பணி நிறைவு செய்யும் தோழர்களுக்கு, 30.05.2024 அன்று, சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், துரை ரீதியான பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தோழர்களை நிர்வாகம் கௌரவப்படுத்தியது. மாவட்ட பொது மேலாளர் திருமதி டாக்டர் C. P. சுபா அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், நம்முடைய மாவட்ட சங்க நிர்வாகிகள் கிளைச் செயலர்கள் திரளாக கலந்து கொண்டோம்.
31.05.2024 அன்று ஓய்வு பெறும், 13 தோழர்களில், 10 தோழர்கள் நம்முடைய BSNLEU உறுப்பினர்கள். அதன் அடிப்படையில், கிளைகளில் நடைபெறும் விழாக்களில், பங்கேற்க முடியாத தோழர்களை அங்கேயே கௌரவப்படுத்தினோம்.
தோழர்கள் L. வெங்கடேசன், M. செம்மண்ணன், (மேட்டூர் கிளை), A. ரவிச்சந்திரன், (நாமக்கல் கிளை) T. தட்சிணாமூர்த்தி, ( மெய்யனூர் கிளை) N. பிரகாசம், S. K. சுப்பிரமணியன், (ஆத்தூர் கிளை) ஆகியோரை, நமது மாவட்ட சங்கம் சார்பாக சால்வை அணிவித்து, கௌரவப்படுத்தினோம்.