BSNLEU சேலம் மாவட்ட செயலர், தோழர் E. கோபால்,[ TT., NWOP பிரிவு,] சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், 31.05.2024 அன்று, தனது இலாகா பணி நிறைவு செய்வதை முன்னிட்டு, அவரது அலுவலகம் சார்பாக, மெயின் தொலைபேசி OCB கூட்ட அரங்கில், அலுவலக ரீதியான, பணி நிறைவு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அலுவலக ரீதியான பிரிவு உபச்சார விழா நிறைவு பெற்றவுடன், தோழர் E. கோபால், மாவட்ட செயலர் அவர்களை, இலாகா வாகனத்தில், அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தோழரை அவரது இல்லத்தில் விட்டு விட்டு வரும் நிகழ்ச்சியிலும், திரு G. சேகர், AGM அவர்களும், திரு P. சண்முகசுந்தரம், SDE NWOP., East அவர்களும், BSNLEU மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.