அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை, 24.05.2024 அன்று ஒரு சந்திப்பிற்கு CMD BSNL அழைத்திருந்தார். அந்தக் கூட்டத்திற்கு செல்லும் முன்னதாக, ஒருமித்த அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் ஒரு கூட்டத்தை நடத்தின. NFTE சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் C.சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், BSNLEU சார்பாக தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் தோழர் C.K.குண்டண்ணா, SNEA சார்பாக தோழர் அடசூல், தோழர் மனிஷ் சமதியா மற்றும் தோழர் அர்விந்த்பால் தாஹியா, SEWA BSNL சார்பாக தோழர் N.D.ராம் மற்றும் தோழர் முகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் காலக் கட்டத்தில் 132 கோடி ரூபாய் செலவில், BCG நிறுவனத்தை அமர்த்தியது, ஒட்டு மொத்தமாக தேவையற்ற ஒன்று என்பதே இந்தக் கூட்டத்தின் ஒருமித்த கருத்து. கட்டிடங்கள் மற்றும் ஊழியர் குடியிருப்புகளை சீரமைப்பதற்கு கூட நிதி இல்லை என BSNL நிர்வாகம் கூறுகிறது. நிதிப் பற்றாக்குறையை சுட்டிக் காட்டி, ஊழியர்களுக்கு மொபைல் கருவிகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை மறுக்கப்படுகின்றன. மிக முக்கியமாக, ஊதிய மாற்றம் என்கிற முக்கியமான பிரச்சனைகூட நிறுவனத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி, தீர்வு காணப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், ஆலோசனை வழங்குவதற்காக, 132 கோடி ரூபாய் செலவு செய்வது என்பது ஒட்டு மொத்தமாக தேவையற்ற ஒன்று. நீண்ட விவாதங்களுக்கு பின்னர், 5% ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் என்கிற கோரிக்கையை, CMD BSNLஉடனான சந்திப்பின் போது எழுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய, மாநில சங்கங்கள்