22.05.2024 அன்று, மாவட்ட சங்க அலுவலகத்தில், BSNLEU சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் M. சண்முகம், மாவட்ட பொருளாளர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் K. ராஜன், மாவட்ட உதவி செயலர் அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்கு பின், மாநில அமைப்பு செயலர், தோழர் R. ரமேஷ், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்க உரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்டச் செயலர் தோழர் E. கோபால் அறிமுக உரை வழங்கினார்.
AIBDPA மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி, TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள், 21 தோழர்கள் விவாதத்தில் பங்கு பெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை
வழங்கினார்.
செயற்குழு கூட்டத்தில், கீழ்க்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது.
1. வருகிற 24.05.2024 அன்று சார்பாக மாநில சங்க அறைகூவல் படி, ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளுக்காக, மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது.
2. BSNLEU சேலம் மாவட்ட செயலர் பணி நிறைவு பாராட்டு விழாவை, 22.06.2024 அன்று சேலத்தில், பிரம்மாண்டமாக நடத்துவது.
3. ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளில் நிர்வாகம் கொடுத்த உறுதி மொழியை அமுல்படுத்தவில்லை என்றால், இயக்கங்களை மேலும் தீவிரப்படுத்துவது.
4. AIBDPA மாவட்ட மாநாடு நடத்த உதவுவது
அமைப்பு நிலை, நீதி நிலை உள்ளிட்ட முடிவுகளும் ஏகமானது எடுக்கப்பட்டது. மாவட்ட உதவி செயலர் தோழர் R. சீனிவாசன் நன்றி கூற, கூட்டம் நிறைவு பெற்றது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்