Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, May 1, 2024

மே தினத்தை சிறப்பாக கொண்டாடவும் .

 


சேலம் மாவட்ட CoC சார்பாக அறைகூவல்


அனைவருக்கும் புரட்சிகரமான மே தின வாழ்த்துக்களை, உரித்தாக்கி கொள்கிறோம். தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும், தமிழக தேர்தல் ஆணையம், மே தின கொண்டாட்டங்களுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கியுள்ளது.

எனவே கிளைகளில் வழக்கமான உற்சாகத்துடன்,
அலுவலகங்களில் சங்க கொடியினை ஏற்றி, சேலம் மற்றும் நாமக்கலில் நடைபெறும் பேரணி
மற்றும் சிறப்பு கூட்டங்கள்களில் பங்கேற்று, இந்த ஆண்டும் மே தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என CoC சார்பாக, அறைகூவல் விடுக்கிறோம்.  

சிகாகோ நகரில், 1886ஆம் ஆண்டு, 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம் ஆகிய கோரிக்கைகளுக்காக  போராடி உயிர் நீத்த மே தின தியாகிகளுக்கு நமது அஞ்சலியை புரட்சிகர தன்மையுடன் செலுத்துவோம்.  

இந்திய உழைக்கும் வர்க்கத்தின் வேலை நேரத்தை அதிகரிக்க முதலாளித்துவ வர்க்கம் முயற்சி செய்கிறது.  இந்த பின்னணியில் தான், இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தை இணைந்து உருவாக்கிய திரு நாராயண மூர்த்தி கொக்கரிக்கிறார்.   

BSNL ஊழியர் சங்கம் அங்கமாக உள்ள World Federation of Trade Unions (WFTU) வாரத்திற்கு 35 மணி நேர வேலை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.  

சமீப மாதங்களில், ஊதிய உயர்வு மற்றும் பணிச்சுமை குறைப்பு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட  முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், உழைக்கும் வர்க்கம், உக்கிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன.  

மே தின நடவடிக்கைகளை சக்தியாக நடத்தி, அதன் செய்திகளையும், புகைப்படங்களையும், மாவட்ட CoCக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சேலம் மாவட்ட CoC, கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
E. கோபால், 
கன்வீனர், CoC