Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, April 28, 2024

01.04.2024 முதல் தரவேண்டிய IDA விகிதம்


01.04.2024 முதல் தரவேண்டிய IDA விகிதம், இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதை அனைத்து தொழிலாளர்களும் அறிவார்கள்.  தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அறிவிக்கும் தொழிலாளர் ஆணையம், 2024 மார்ச் மாதத்திற்கான அந்த குறியீட்டு எண்ணை அறிவிக்காதது தான், இதற்கு காரணம்.  எனவே, 01.04.2024 முதல் வழங்க வேண்டிய IDA விகிதங்களை, DPEயும் அறிவிக்கவில்லை.

இதற்கு முன், இது போன்ற காலதாமதம் ஏற்பட்டதே இல்லை.  எனவே, இந்த விஷயத்தில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், 25.04.2024 அன்று தொழிலாளர் நல அமைச்சகத்தின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

தோழர் ஜான் வர்கீஸ் 
பொது செயலாளர் (பொறுப்பு)


தகவல் மத்திய மாநில சங்கங்கள்