Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, January 30, 2024

சேலத்தில் எழுச்சிகரமான கருத்தரங்கத்தை, தமிழ் மாநிலம் நடத்தியது.


CoCயின் அறைகூவலுக்கு ஏற்ப, 27.01.2024 அன்று, சேலத்தில் ஒரு எழுச்சிகரமான கருத்தரங்கத்தை, தமிழ்நாடு மாநில சங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை, BSNL ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் தோழர் E.கோபால் தலமையிலான குழு மிகச்சிறப்பாக செய்திருந்தது. சுமார் 400 தோழர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கத்திற்கு, தோழர் R.ராஜசேகர், CS, AIBDPA மற்றும் CoCயின் தலைவர் தலமையேற்று நடத்தினார். தோழர் P.ராஜு, CS, BSNLEU மற்றும் CoC ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, தனது சிறப்புரையில், ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காணப்படாதது, BSNLன் 4G & 5G சேவைகள் சரியான நேரத்தில் துவங்காமல் இருப்பது, ஓய்வூதிய மாற்றம், புதிய பதவி உயர்வு கொள்கை, மற்றும் சீரமைப்பு என்ற பெயரில், பதவிகளை, கண் மூடித்தனமாக ஒழித்தது உள்ளிட்ட விஷயங்களை விரிவாக எடுத்துரைத்தார். மேலும், அரசாங்கத்தின் ஊழியர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் தொடர்பாகவும் விளக்கி பேசியதுடன், 2024, பிப்ரவரி 16 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கருத்தரங்கத்தில், தோழர் S.செல்லப்பா, AGS, BSNLEU, தோழர் S.மோகன்தாஸ், VP, CHQ, AIBDPA மற்றும் தோழர் M.சையது இத்ரீஸ், OS, CHQ, BSNL CCWF உரை நிகழ்த்தினர். இறுதியாக, TNTCWU மாநில தலைவர் தோழர் C.பழனிச்சாமி நன்ற் கூறி முடித்து வைத்தார். இந்த கருத்தரங்கத்தில் கலந்துக் கொண்ட அனைவரும், பிப்ரவரி 16 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது என்ற முடிவோடு கலைந்து சென்றனர்.

கருத்தரங்க முடிவில், BSNL நிறுவனம், BSNL ஊழியர் ,ஓய்வூதியர், ஒப்பந்த ஊழியர் சம்மந்தமாக மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது .

தகவல்: BSNLEU  மத்திய மாநில சங்கங்கள் 

தீர்மானம் 1

தீர்மானம் 2

தீர்மானம் 3