Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 14, 2024

எழுச்சிமிகு ஏழாவது மாநாடு


தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின், 7வது மாவட்ட மாநாடு, 07.01.2024 அன்று சேலம் CITU அலுவலக கூட்ட அரங்கில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக தேசிய கொடியை, தோழர் M.சண்முகம், மாவட்ட  உதவி செயலர் ஏற்றி வைக்க, சங்கக் கொடியை தோழர் C. பாஸ்கர் மாவட்ட பொருளாளர் விண்ணத்திரும் கோஷங்களுக்கு இடையே, ஏற்றி வைத்தார்.மாவட்ட உதவி தலைவர் தோழர் P. செல்வம் அஞ்சலி உரை வழங்க, மாவட்ட செயலாளர் தோழர் M. செல்வம் வரவேற்புரை வழங்கினார். 

TNTCWU தமிழ் மாநில பொதுச்செயலாளர் தோழர் M. சையத் இத்ரீஸ், மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர்கள் S. தமிழ்மணி, மாவட்ட செயலாளர், AIBDPA, E. கோபால் மாவட்ட செயலாளர் BSNLEU, R. ரமேஷ் மாநில அமைப்பு செயலாளர், BSNLEU,  S. ஹரிஹரன் மாநில உதவி செயலர், BSNLEU ஆகியோர் வாழ்த்துரை வழங்க, தோழர் A.பாபுராதா கிருஷ்ணன், அகில இந்திய உதவித் தலைவர், BSNLCCWF, மாநாட்டு சிறப்புரை வழங்கினார். 28.01.2024 அன்று நடைபெறவுள்ள 7வது தமிழ் மாநில மாநாட்டிற்கு, ஏற்கனவே ரூ 5000.00 கோட்டா வழங்கிய நிலையில், எஞ்சியிருக்க கூடிய நிலுவை தொகை ரூ5000.00 மாநில செயலரிடம் வழங்கி, கோட்டாவை நிறைவு செய்தோம். 

பின்னர் உணவு இடைவேளைக்காக மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது உணவு இடைவேளைக்கு பின் நடைபெற்ற பொருளாய்வு குழுவில், சார்பாளர்கள் விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், மாநில செயலர் தேர்தல் அதிகாரியாக இருந்து புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தி வைத்தார். தோழர் K. ராஜன் மாவட்ட தலைவராகவும், தோழர் M. செல்வம் மாவட்ட செயலாளராகவும், தோழர் V. குமார் மாவட்ட பொருளாளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல், ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதா மாதம் முறையான தேதியில் சம்பளம் வழங்க வேண்டும், EPF / ESI சமூக பாதுகாப்பு சலுகைகள் உறுதிப்படுத்த வேண்டும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது, OUTSOURCING முறை கைவிடபட்டு, பழைய LABOUR CONTRACT முறை அமுல் படுத்த வேண்டும், ஊதிய நிலுவை உடனடியாக வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 

தோழர் A. ஜெய்சங்கர் நகர கிளை செயலர், நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து, திரளாக மாநாட்டில் கலந்து கொண்ட ஒப்பந்த ஊழியர்களுக்கும், சகோதர அமைப்புகளான BSNLEU, AIBDPA சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் சேலம் மாவட்ட TNTCWU சங்கம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.

இந்திய தொழிலாளி வர்கத்தின் விடிவெள்ளியாம், CITU அமைப்பின் கூட்டங்களுக்காவே வடிவமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கம், அமைதியான சூழல், அன்பான உபசரிப்பு, சுவையான உணவு, சிறப்பான விளம்பரம் என நல்ல பல ஏற்பாடுகளை செய்து, வரவேற்புக்குழுவாக செயல்பட்ட  நகர கிளை தோழர்களே மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.  

தோழமையுடன், 
M. செல்வம், 
மாவட்ட செயலர்