Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, December 4, 2023

TNTCWU மாவட்ட செயற்குழு முடிவுகள்


TNTCWU சேலம் மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், 28.11.2023 அன்று, சேலம் மாவட்ட BSNLEU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் M. சண்முகம் அஞ்சலியுறை நிகழ்த்த,  மாவட்ட உதவி தலைவர் தோழர் P. செல்வம் அனைவரையும் வரவேற்றார். TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர் செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்கவுரை வழங்கினார். 

ஆய்படு பொருள் மீதான விவாதத்தில், கிளை செயலர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பின்னர் BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், மாநில அமைப்பு செயலர் தோழர் R.  ரமேஷ், மாவட்ட செயலர் தோழர் E. கோபால். AIBDPA மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். AIBDPA மாவட்ட உதவி தலைவர் தோழர் P. தங்கராஜு நன்றி கூறி, கூட்டத்தை நிறைவு செய்தார். 

கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

1. காப்பர் இணைப்பகங்களை மூடுவதால், ஏற்படும் வேலை இழப்பில் இருந்து, ஊழியர்களை மாற்று பணிகள் மூலம் பாதுகாப்பது.

2.  மாநில தலைமை பொது மேலாளர் உத்தரவு அடிப்படையில், INFRA ஊழியர்களுக்கு வரவேண்டிய ஊதிய நிலுவை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளவது. 

3. விழாக்காலம் என்கிற அடிப்படையில், தீபாவளி பண்டிகைக்குள், பரவலாக மாவட்டம் முழுவதும் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு, போனஸ், சம்பளம், ஊதிய நிலுவை என ஏதாவது ஒரு தொகை கிடைக்க ஏற்பாடு செய்த சேலம் மாவட்ட BSNLEU  சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

4. 28.01.2024 மாநில மாநாடு நன்கொடை, ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும், ரூ.200.00 வசூலிப்பது. மாநில மாநாட்டு கோட்டாவை, முழுமையாக பூர்த்தி செய்வது.

5. செலுத்திய சந்தா அடிப்படையில் தான், மாநில மாநாட்டு சார்பாளர்கள் எண்ணிக்கை அமையும் என்பதால், கிளைகள் உடனடியாக சந்தாவை உறுப்பினர்களிடம் வசூலித்து, மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைப்பது.

6. மாவட்ட மாநாட்டை, எளிமையாக ஆனால் வலிமையாக, சேலத்தில், மாநில சங்க அனுமதி பெற்று, 07.01.2024 அன்று நடத்துவது.

7. மாவட்ட மாநாட்டிற்கு, மாவட்டம் முழுவதும் உள்ள, ஒப்பந்த ஊழியர்களை திரட்டி, தொழிலாளர் பிரச்சனைகளை விவாதிக்கும், கொள்கை முடிவுகளை எடுக்கும் மாநாடாக நடத்துவது. அகில இந்திய, மாநில தலைவர்களை அழைத்து, அமைப்பை மேலும் பலப்படுத்தும் மாநாடாக நடத்துவது. 

8. 28.01.2024 மாநில மாநாட்டிற்கு, மாநில சங்கம் அனுமதிக்கும், அளவில் ஊழியர்களை அழைத்து செல்வது. மாநில சங்கம் அனுமதித்தால் ஈரோடு வரவேற்பு குழுவிற்கு உதவுவது.

9. கிளை மாநாடுகள் நடைபெறாத இரண்டு கிளைகளிலும் 31.12.2023க்குள் கிளை மாநாடுகள் நடத்துவது.

10. ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக மாவட்ட மாநாட்டிற்கு வழங்கும் உதவிகளை நன்றியுடன் ஏற்று கொள்வது. CoC வழிகாட்டுதல்படி மாநாட்டை நடத்துவது.

தோழர்களை மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகளை, செழுமையாக நிறைவேற்றுவோம். ஒப்பந்த ஊழியர் நலன் காக்கும் ஒரே அமைப்பு, TNTCWU அமைப்புதான் என்பதை மீண்டும் நிருபிப்போம்.

தோழமையுடன், 
M. செல்வம், 
மாவட்ட செயலர், TNTCWU