Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, December 2, 2023

பிரம்மாண்டமாக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்!


Joint Forum போராட்ட அறைகூவல் படி, நமது சேலம் மாவட்டத்தில், ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக, 28.11.2023 ன்று மனித சங்கிலி போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர்கள் S. ஹரிஹரன், (BSNLEU), M.  மதியழகன், (AIBDPA), K. ராஜன் (TNTCWU) கூட்டுத் தலைமை தாங்கினர்.

முதலில், மத்திய சங்கங்கள் சார்பாக நடைபெறக்கூடிய மாநில தழுவிய போராட்டத்தில்,  கலந்து கொண்டு விட்டு, தோழர்கள் தலைமை தபால் நிலையம் துவங்கி அறிஞர் அண்ணா சிலை வரை  வரிசையாக கைகோர்த்து நின்றனர்.  சுமார் 200க்கும் மேற்பட்ட தோழர்கள், கரம் கோர்த்து நின்றது, பிரம்மாண்டமாக இருந்தது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது, என்று சொன்னால், அது மிகையல்ல.

பெண் தோழர்கள் 25க்கும் மேற்பட்ட தோழர்கள், முதலில் அணிவகுத்து நிற்க, அவர்களை தொடர்ந்து, ஆண் தோழர்கள் கரம் கோர்த்து நின்றனர். சுமார் அரை மணி நேரம், பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்கள் ஆங்காங்கு எழுப்பி, கரம் கோர்த்து நின்றபின், மெயின் தொலைபேசி நிலையத்திற்குள், கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

அதில், மூன்று சங்க மாநில நிர்வாகிகள் தோழர்கள் R. ரமேஷ், T.  பழனி, C. பாஸ்கர் கருத்துரை வழங்க, மூன்று சங்க மாவட்ட செயலாளர்கள் தோழர் E. கோபால், S.  தமிழ்மணி, M. செல்வம் சிறப்புரை ஆற்றினர். தோழமை சங்கங்கள் சார்பாக, FNTO மாவட்டச் செயலர் தோழர் C.  கமலக்கூத்தன், CITU மாநில உதவி தலைவர், தோழர் T. உதயகுமார்,  அஞ்சல்/RMS தோழர் K. R. கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

BSNLEU மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தை வெற்றிகரமாக்க, கடினமாக உழைப்பை வழங்கிய, மூன்று சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள், முன்னணித் தோழர்கள், ஒய்வூதிய அமைப்பு தோழர்கள் என அனைவருக்கும் ஒருங்கிணைப்புக்குழு, CoC., சார்பாக நெஞ்சு நிறை  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையுடன்,
E. கோபால்,
கண்வினர், CoC